“ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடும். மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடும். ராஜபக்ஷக்களின் ஆட்சி மீது கோபம் இல்லை. அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தற்போதைய எதிர்க் கட்சியினர் மீண்டும் ஆட்சி கிடைக்கக் கூடாது என்று பிரார்த்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கோணத்திலேயே பார்க்க முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் தனியாக இயங்குகிறது. பாதாளக் குழுக்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பிட்டவையாகும். தற்போது செயற்பாட்டில் இருக்கின்றன. இருந்தபோதும், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகிறது என்பதை நான் பயமின்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுகிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இருந்தபோதும் அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்க வேண்டும். ஒருசில எதிர்க் கட்சியினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
மீண்டும் அவர்களுக்கு ஆட்சிகிடைக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். 75 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை கட்டியெழுப்பக் கூடிய நாட்டை கட்டியெழுப்பவில்லை. மீண்டும் இவர்கள் கூறும் தேவதை கதைகளை நம்பி அதிகாரத்தை வழங்கி, அவர்களுக்கே வரப்பிரசாதங்களை வழங்கி ஆட்சியாளர்களாக்குமளவுக்கு மக்கள் முட்டாள்களாவார்கள் என்றால் அந்த மக்களுக்கு எப்போதும் தற்போதுள்ள பிரச்சினைகளுடனே வாழ வேண்டியவரும். நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற எந்தவொரு வேண்டுதலும் இல்லை.
ஒருவேளை, ராஜபக்ஷக்கள் ஆட்சி வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடும்.மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடும். ராஜபக்ஷக்களின் ஆட்சி மீது கோபம் எதுவும் இல்லை. அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன். உண்டுவிட்டு, நித்திரைக்கொண்டு வானத்தை பார்த்துகொண்டு இருந்தவர்கள் நாங்கள் இல்லை. ஒருசிலரை போன்று சோரம் போகவும் இல்லை. நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தோம். அன்போடு நாட்டுக்காக பணியாற்றினோம். எங்களின் அனுபவத்துக்க சமை அவர்களின் மீது வெறுப்பு இருக்கிறது என்றார்.
