Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

நவம்பர் 21, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஐந்தாவது சாதாரண கூட்டமானது தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் நடைபெற்று இருந்தது..

இதன் போது மாவீரர் நினைவாக தவிசாளர் மற்றும் உபதவிசாளர் வி.சஞ்சுதன் உள்ளிட்டோர் தீபம் ஏற்றியதுடன், மாவீரர் நினைவு வணக்கத்துடன் சபை அமர்வு இடம்பெற்றது.

சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட போது சபை உறுப்பினர்கள் 23 பேரில் 22 பேர் பிரசன்னமாகி இருந்த நிலையில் ஏகமனதாக பாதீடு ஏற்றுக் கொள்ளப்பட்டது

இது தொடர்பில் சபையின் தவிசாளர் கருத்து தெரிவித்த போது,

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய வவுனியா வடக்கு பிரதேசத்தை நாங்கள் ஒரு முன்மாதிரியான பிரதேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம்.

அந்த வகையில் எங்களுடைய இந்த பிரதேசத்தில் 14 வட்டாரங்கள் காணப்படுகின்றது. 25 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பிரதேச சபையின் ஊடாக சபைக்கான சொந்த வருமானமாக 4 கோடியே 57 லட்சத்து 25 ஆயிரத்தி 500 ரூபாய் வருகின்றது.

நாங்கள் அந்த வருமானத்திற்கு ஏற்றவாறு சபையின் நடவடிக்கைகளை உள்வாங்கி கொண்டு இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம். நாங்கள் எங்களுடைய மக்கள் நலன் சார்ந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 10 லட்சம் ரூபாயாக ஒதுக்கி இருக்கிறோம். அந்த வகையில் 14 வட்டாரத்திற்கும் 1 கோடியே 40 லட்சம் ரூபாயை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

எங்களுடைய பிரதேசத்தின் சேவைகளை அதாவது ஒவ்வொரு பிரதேசங்களிலும் வீதி விளக்குகள், வீதி பராமரிப்பு, வீதியை செப்பனிடல், சுடலை பராமரிப்பு, மைதான பராமரிப்பு ஆகிய வேலைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே நாங்கள் எங்களுடைய பிரதேச சபையின் ஊடாக எங்களுடைய இந்த பிரதேசத்தின் மக்களுடைய நலனில் மிகவும் அக்கறையாக அவர்களுக்கான அந்த சேவைகளை திறம்பட செய்ய வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு இந்த பாதீட்டை தயாரித்திருக்கிறோம்.

எனவே நாங்கள் இந்த பாதீட்டை மக்கள் பார்வைக்காக இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரை வைக்க உள்ளோம். எங்களுடைய நெடுங்கேணி தலைமை அலுவலகத்திலும், நெடுங்கேணி உப அலுவலகத்திலும், கனகராயன்குளம் உப அலுவலகத்திலும், நயினாமடு உப அலுவலகத்திலும் பாதீட்டை பார்வையிட முடியும்.

இந்த இடத்தில் எங்களுடைய இந்த பாதீட்டை தயாரிப்பதற்கு எல்லா வகையிலும் எங்களுடன் முழு துணையாக இருந்த எங்களுடைய கௌரவ உறுப்பினர்கள், சபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் – 40 வருட கடூழிய சிறைத்தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிவஞானம் சிறிதரன்

மே 9, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு தேவை!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவித்தல்

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?