Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

முட்டை பற்றிய சில ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

ஜனவரி 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முட்டையில் புரதம், விற்றமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு என சத்துக்கள் அதிகமாக உள்ளது.

முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கருவில் எது ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்பதைப் பார்க்கலாம்.

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த மஞ்சள் பாகத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

பச்சை மஞ்சள் கருவில் லுடீன், ஜியாக்சாண்டின், கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

ஆனால், இதில் கலோரிகள் அதிகம்.
எடை அதிகரிக்க விரும்புபவர்கள் மஞ்சள் கருவை சாப்பிடலாம்.
இது முடி மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

முட்டையின் வெள்ளைக்கருவை விட முட்டையின் மஞ்சள் கருவில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.
இதில் விற்றமின் B6, B12, A, D, E மற்றும் K ஆகியன காணப்படுகின்றன.

இதில் கல்சியம், மக்னீசியம், இரும்பு மற்றும் செலினியம் போன்றவையும் நிறைந்துள்ளன.
மஞ்சள் கருவிலுள்ள கரோட்டினாய்டுகள் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
இது உடலின் இருதய செயற்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

முட்டையின் வெள்ளைக் கரு:

முட்டையின் பெரும்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
இது கொழுப்பு இல்லாதது மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது என்பதால் ஆரோக்கிய விரும்பிகள், எடையைக் குறைக்க விரும்புவோர் உண்ணலாம்.

தசைகளை உருவாக்குவதற்கும் எடை அதிகரிப்பதற்கும் உதவும்

இதில் பொட்டாசியம் மினரல் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பராமரிக்கவும் உதவும்.
ரைபோஃப்ளேவின் விற்றமின் கண்புரை மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தடுக்க உதவுகின்றது.

உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கின்றது.
இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது.
தசைகள் வலுவாக இருக்க முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடுவது நல்லது.

ஒரு முழு முட்டையின் 93% இரும்புச்சத்து மஞ்சள் கருவில் உள்ளது மற்றும் 07% வெள்ளைக் கருவில் உள்ளது.
90 சதவீத கல்சியம் மஞ்சள் கருவில் உள்ளது.

முட்டையின் இரண்டு பகுதிகளும் ஆரோக்கியமாக இருந்தாலும், ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது மஞ்சள் கரு மிகவும் பயனுள்ளது.

நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரோல் இருப்பதால், அவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
எனவே, அடுத்த தடவை முட்டைகளை உண்ணும்போது அவற்றை நிராகரிப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்.

ஏனெனில், மதிப்புமிக்க ஊட்டச்சத்துகளை தூக்கி எறிந்து விடுவீர்கள். முழு முட்டைகளையும் சாப்பிடுவதன் மூலமாக, அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறுவீர்கள்.

முந்தைய செய்தி கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் – ட்ரம்ப்
அடுத்த செய்தி நாளை முதல் இலங்கை முழுவதும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

உலக சந்தையில் மண்ணெண்ணெய்யின் தற்போதைய விலை நிலவரம்…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் – நா.வர்ணகுலசிங்கம்

மார்ச் 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்த இலங்கை கடவுச்சீட்டு

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?