Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை – நா.வேதநாயகன்

பிப்ரவரி 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை. காணிகள் தொடர்பில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன்.

மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும்.

அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த செய்தி திஸ்ஸ விகாரை – மாற்றுக்காணியாக வழங்கவிருந்த காணிகளின் உறுதிகளில் சிக்கல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு…

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மரகுற்றிகளை ஏற்றிவந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

நவம்பர் 11, 2025
1
இலங்கை

வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

மார்ச் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?