யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு மாற்று காணியாக வழங்கப்படவிருந்த காணியின் உறுதியில் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
அதில், திஸ்ஸ விகாரை சட்டவிரோத கட்டடம் அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களே ஆளுநரிடம் அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு எமது காணிகளை விடுவித்து தர வேண்டும். விகாரைக்கு உரியதாக கூறப்பட்ட மாற்றுக்காணியின் உறுதிகளில் சிக்கல்கள் உள்ளன. அதனால் எமக்கு அந்த மாற்றுக்காணிகள் வேண்டாம், எமது காணியை விடுவித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்கள்.