Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை- சாணக்கியன் தெரிவிப்பு!

நவம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பொறுப்புகூறல், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். காணி விடுவிப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் மேலும் செய்ய வேண்டியுள்ளது.

தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்காக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். இதனை பெறும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர்.

இது கார்த்திகை மாதம், வடக்கு, கிழக்கில் எமது விடு தலைக்காக போராடிய வீரமறவர்களை நினைவுகூரும் மாதம். ஆயிரக்கணக்கான போராளிகள் இனத்தின் விடுதலைக்காக இம் மண்ணில் விதைக்கப்பட்டனர். அவர்களை நினைவு கூரும் மாதம்.

எனவே, பாலமொன்றை பெறுவதற்காக எமது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை. ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க கூடிய உரிமை எமது கட்சிக்கு உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்கானது எமது கட்சி. ஜனாதிபதிமீது எமக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.” எனவும் சாணக்கியன் எம்.பி. தெரிவித்துள்ளார்

 

முந்தைய செய்தி அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!
அடுத்த செய்தி மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே-யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 19, 2025
இலங்கை

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன்; அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

ஜனவரி 10, 2026
இலங்கை

வவுனியாவில் விவசாய நிலங்களில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?