Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தலில் ‘அழியாத மை’ நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு

ஜூன் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் வாக்காளர்களின் விரல்களில் இடப்படும் ‘அழியாத மை’ நடைமுறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலுக்கு சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பப்ரல் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த முன்மொழிவு பல கோணங்களில் நேர்மறையான ஒரு நடவடிக்கையாகும்.

அரசியல் கட்சிகள், பங்குதாரர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே இது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை ஒழிப்பதன் மூலம், அழியாத மை இறக்குமதி, விநியோகம் மற்றும் அதன் நிர்வாகக் கையாளுதல் தொடர்பான செலவுகள் குறையும்.

இது தேர்தல் செலவுகளை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதற்கு பங்களிக்கும்.

வாக்காளர் அடையாள அட்டைகளின் கட்டாயத் தேவை வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறைகளை வலுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தேர்தல்களின் போது ஆள்மாறாட்டம் செய்வதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளன.

தற்போதைய சூழலில், முன்னைய காலங்களை விட அழியாத மையின் தேவை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பல தசாப்தங்களாக இலங்கையின் தேர்தல் செயல்முறையின் ஒரு அங்கமாக அழியாத மை பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், நவீனமயமாக்கப்பட்ட வாக்காளர் இடாப்புகள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, மோசடியான வாக்குகளைச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஜூன் 2026
அடுத்த செய்தி சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கம் அதிகார துஷ்பிரயோகம் என நாமல் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தற்போதும் சீரற்ற காலநிலை – 310 பேர் நிலை என்ன?

நவம்பர் 29, 2025
இலங்கை

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி தீ விபத்து.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரி சபைகள் தொடர்பில் தீர்ப்பு வந்ததும் நடவடிக்கை – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். எரியுண்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?