பிலிப்பைன்ஸில் விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதில் 51 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
எம்மா அமித் (Emma Amit) என்ற இந்த பெண்ணே சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வந்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி நண்டுகளைத் தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பது போன்ற காணொளிகளை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த நண்டை உண்ட பிறகு வலிப்பு மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளுடன் அவர் மயக்கமடைந்துள்ளார்.
இவரின் நிலை அறிந்த அயலோர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
