மொண்ட்ரியலுக்கு மேற்கே உள்ள வாட்ரூயில்-சூலாஞ்ச் (Vaudreuil-Soulanges) பிராந்தியத்தில் அமையவுள்ள புதிய பிரம்மாண்ட மருத்துவமனைக்குத் தேவையான ஊழியர்களைத் தக்கவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்காக, குடிவரவு விதிகளில் உடனடி மாற்றம் தேவை என உள்ளூர் தலைவர்கள், கியூபெக் மாகாண அரசை வலியுறுத்தியுள்ளனர்.
வாட்ரூயில்-சூலாஞ்ச் (Vaudreuil-Soulanges) பிராந்தியத்தில் 2028-ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள இந்தப் புதிய மருத்துவமனை சுமார் 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கியூபெக் அரசு சமீபத்தில் ரத்து செய்த Quebec Experience Program குடிவரவுத் திட்டத்தினால், ஏற்கனவே இங்கு பணியாற்றி வரும் திறமையான வெளிநாட்டு ஊழியர்கள், ஒன்ராறியோ போன்ற அண்டை மாகாணங்களுக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கியூபெக் அரசு கடந்த நவம்பரில் Quebec Experience Program திட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ‘PSTQ’ முறையை அறிமுகப்படுத்தியது.
இதனால் ஏற்கனவே இங்கே பலகாலமாக வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் ”நிரந்தரக் குடியுரிமை” பெறும் வாய்ப்பு, தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
