Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.

எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது.

இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில் ஈடுபட்ட ஊர்காவற்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனத்தை நிறுத்துமாறு காவல்நிலைய பொறுப்பதிகாரியும் கட்டளையிட்டுள்ளார்
எனினும், அதனையும் மீறி அந்த சிற் றூ ர்தி பயணிக்க முயற்சித்துள்ளது.

இதன்போதே அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த வாகன சாரதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது, குறித்த வாகனத்தில் பயணித்த மேலும் இரண்டு பேர் ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் ப்ரோக்கோலி
அடுத்த செய்தி கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி – மருதலிங்கம் பிரதீபன்

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இரு வேறு குற்றச்சாட்டில் கைதான நால்வர்

அக்டோபர் 10, 2025
இலங்கைமுதன்மை செய்தி

தமிழரசுக் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை – சி.வி.கே சிவஞானம்

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஒரு நாள் அடையாள போராட்டம்

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?