கொழும்பு நகர் பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி ராஜகிரிய, மொரகஸ்முல்ல, நாவல, ஒபேசேகரபுர, கொலன்னாவ ஆகிய நகரசபை பிரதேசங்களுக்கு இன்று இரவு 8 மணிமுதல் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பத்தலையிலிருந்து கொலன்னாவ வரையிலான நீர் விநியோகத்தை வழங்கும் பிரதான நீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாதால் இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
