இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கை இன்றையதினம் (09) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 14 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
