கெஹல்பத்தர பத்மேவிடம் நடைபெற்ற விசாரணையின்போது தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியுடன், நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான கம்பஹா பபா என்ற சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ரி-56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த தோட்டாக்கள் கெஹெல்பத்தர பத்மேவினால் தமக்கு வழங்கப்பட்டதாக அவர் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த தோட்டாக்களை வெலிசறை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


