தனது CAQ கட்சி கியூபெக்கிற்கு இப்போதும், எப்போதும் தேவை என்று, பிரான்சுவா லெகோல்ட் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாண முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, முதல்முறையாகப் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த லெகோல்ட், நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது கட்சியின் எதிர்காலம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் கொடுத்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தனது CAQ கட்சியால் மட்டுமே முடியும் என்று பிரான்சுவா லெகோல்ட் கூறினார்.
மொண்ட்ரியல் போன்ற நகரங்களில் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்க லிபரல் கட்சி கட்சி தவறிவிடும் என்றும், அதைப் பாதுகாக்கத் தனது கட்சியே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கனடாவுடன் இணைந்திருந்து கியூபெக்கிற்கான கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதே (Autonomy) தற்போதைய சூழலில் புத்திசாலித்தனமான முடிவு என, அவர் கூறியமை சுட்டிக்காட்டத்தக்கது.
