ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பெண் குடும்ப மருத்துவர்கள் (Family Doctors), ஆண்களை விட 15 முதல் 20 சதவீதம் அதிக நேரத்தைப் நோயாளிகளுக்காகச் செலவிடுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தற்போதைய மருத்துவக் கட்டண முறையால் அவர்களுக்குக் குறைவான வருமானமே கிடைப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஒண்டாரியோ மருத்துவ சங்கம் (OMA) முதலியன இணைந்து நடத்திய இந்த ஆய்வு, நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
ஒண்டாரியோ மாகாணம் முழுவதும் உள்ள 1,050-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் சராசரியாக 4 நிமிடங்கள் கூடுதலாகச் செலவிடுவது கண்டறியப்பட்டுள்ளது.
