நாட்டின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ‘மோல்சன் மதுபான ஆலை’ (Molson Brewery) கட்டிடத்தின் மீது சிலர் கிராஃபிட்டி (Graffiti) எனப்படும் வர்ணப்பூச்சுக் கிறுக்கல்களைச் செய்து சேதப்படுத்தியுள்ளனர்.
மொண்ட்ரியலில் உள்ள நோட்ரே-டேம் தெருவில் அமைந்துள்ள இந்த பழமையான கட்டடத்தின் சுவர்களில் இந்தச் சேதங்கள் கண்டறியப்பட்டன.
கட்டிடத்தின் உரிமையாளர்களில் ஒருவரான மான்டோனி குழுமம் (Groupe Montoni) இது குறித்துப் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக மொண்ட்ரியல் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தக் கட்டடம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்பதால், சாதாரண முறையில் வர்ணப்பூச்சினை அகற்றினால், அதன் கற்கள் சேதமடைய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
