இவ்வருடத்தின் ஆரம்பத்திலேயே மிளகாய் வகைகளின் விலைகள் அதிகரித்து செல்லக் கூடியதை காணக் கூடியதாகவுள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை இன்று 600 ரூபாய்க்கு நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 900 ரூபாய்க்கும், மஞ்சள் குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தக்காளி ஒரு கிலோகிராம் 750 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.


