Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

வெனிசுலா அதிபர் கைது குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் கார்னி

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் மார்க் கார்னி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகம் திரும்புவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு எனப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு வெனிசுலா தேர்தலில் மதுரோ முறைகேடாக வெற்றி பெற்றதிலிருந்து, அவரது ஆட்சியைத் கனடா அங்கீகரிக்கவில்லை என்பதைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வெனிசுலா மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க
வேண்டும் என்றும், ஒரு அமைதியான ஆட்சி மாற்றமே தற்போதைய தேவை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் நடவடிக்கையை நேரடியாகக் கண்டிக்காத பிரதமர் கார்னி, சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை மட்டும்
வலியுறுத்தினார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) இதனை ஒரு பயங்கரவாத ஒடுக்குமுறை" என வரவேற்றுள்ளார்.
மதுரோ ஒரு சோசலிச சர்வாதிகாரி மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதி எனவும் அவர் சிறையில் தான் இருக்க வேண்டும், எனவும் கூறியுள்ள பியர் பொய்லிவ்ரே, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மதுரோவின் ஆட்சி மோசமானது என்பதை ஏற்றுக்கொண்டாலும், இராணுவ பலத்தைப் பயன்படுத்தி ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என, பிளாக் கியூபெக் கவலை தெரிவித்தது.

இதேவேளை, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, கனடாவின் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதிக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வெனிசுலா விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கனடா அரசாங்கம் தனது சர்வதேச நட்பு நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

முந்தைய செய்தி கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.
அடுத்த செய்தி கியூபெக்”License Plates” மாற்றாமல் வாகனம் பயன்படுத்தினால் 336 டொலர் அபராதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியா காவல்துறையினர் மீது பதிவாகியுள்ள குற்ற சாட்டு!

ஆகஸ்ட் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை …..

ஏப்ரல் 2, 2025
கனடா

டொராண்டோ நகர தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

டிசம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

தன்னுடைய பதவியை இழந்த பியர் பொய்லிவ்…

மே 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?