கியூபெக் மாகாணத்தின் காட்டினோ நகரில், வாகனங்களில் “License Plates” எனப்படும் பிற மாகாண உரிமத் தட்டுகளை மாற்றாமல் பயன்படுத்திய குடியிருப்பாளர்களுக்கு எதிராகப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் புகார்களை அளித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2,437 புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் சுமார் 100 பேருக்கு தலா 336 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிப்பணத்தைத் தவிர்க்கும் நோக்கில், பலர் தமது வாகனங்களில் ஒன்டாரியோ மாகாணத் தட்டுகளையே தொடர்ந்து பயன்படுத்தி வருவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருவர் கியூபெக் மாகாணத்திற்குக்குக் குடிபெயர்ந்தால், 90 நாட்களுக்குள் தனது வாகனத்தைக் கியூபெக் உரிமத் தட்டிற்கு (SAAQ) மாற்ற வேண்டும் என்பதே சட்ட விதியாகும்.
கியூபெக்கில் வாகனப் பதிவு வரி தற்போது 120-டொலர் ஆக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வரிப்பணம் நகரப் பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


