ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்தித்த பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு, என்.டி.பி (NDP) மற்றும் லிபரல் கட்சிகள் தற்போது அந்த மாகாணத்தில் தங்களை அடிமட்டத்திலிருந்து சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளன.
ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டின் கன்சர்வேடிவ் கட்சி மூன்றாவது முறையாகவும் அந்த மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், ஒன்டாரியோ மாகாணத்தில் சிதறிக் கிடக்கும் தனது ஆதரவாளர்களை ஒன்றிணைக்க எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
ஒன்டாரியோ லிபரல் கட்சியின் முன்னாள் தலைவர் பானி குரோம்பி (Bonnie Crombie), கட்சிக்குள் தனக்கு ஆதரவு குறைந்ததைத் தொடர்ந்து பதவிலகினார்.
ற்போது ஜான் ஃபிரேசர் (John Fraser) தலைமையில், ஒன்டாரியோ லிபரல் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
