நாட்டின் கிழக்கு மாகாணங்களை ‘எஸ்ரா’ (Ezra) என்ற சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் தாக்கி வருகிறது.
உறைபனி மழை (Freezing Rain), ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று எனப் பலவிதமான இயற்கைச் சீற்றங்களால் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 18 மில்லி மீற்றர் தடிமனான பனிக்கட்டி சாலைகளை மூடியுள்ளதால், ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் முடங்கியுள்ளது.
நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் ஓய்ந்தாலும், உறைந்த பனியை அகற்ற நீண்ட காலம் எடுக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
