உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் காரணமாக மொன்றியல் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்!
மொன்றியலில் நடைபெற்று வரும் UCI Road World Championships காரணமாக நகரின் பல முக்கிய வீதிகளில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
செப்டம்பர் 19 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச போட்டிகளுக்காக பல வீதிகள் குறிப்பிட்ட நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படுகின்றன.
இன்று, செப்டம்பர் 21ஆம் தேதி, Bonaventure Expressway downtown நோக்கிய திசையில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மூடப்பட்டுள்ளது.
மேலும் René-Lévesque Boulevard பகுதியில் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை குறிப்பிட்ட பகுதி மூடப்பட்டுள்ளது.
Île-des-Sœurs பகுதியில் இருந்து Highway 15 North செல்லும் access ramp-மும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக downtown Montréal நோக்கி செல்லும் சாரதிகள் பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மொன்றியல் நகர நிர்வாகம் மாற்றுப் பாதையாக Ville-Marie Expressway-ஐ பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
மேலும் Highway 15-இன் சில exit-களிலும் தற்காலிக மாற்றங்கள் அமுலில் உள்ளன.
எனவே இன்று மொன்றியல் நகருக்குள் வாகனத்தில் பயணம் செய்யும் போது, குறிப்பாக downtown மற்றும் Île-des-Sœurs பகுதிகளை கடக்கும் சாரதிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.


