பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
