கனடா முழுவதும் வீசி வரும் கடும் பனிப்புயல் மற்றும் சூறாவளி காற்று காரணமாக, கிறிஸ்துமஸ் விடுமுறைப் பயணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
டொராண்டோ, மொன்றியல் மற்றும் வான்கூவர் போன்ற முக்கிய விமான நிலையங்களில் இன்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
இந்தத் திடீர் காலநிலையால் ஆயிரக்கணக்கான பயணிகள், விமான நிலையங்களிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் மட்டும் சுமார் 270 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
மொன்றியால் விமான நிலையத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 100 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
