கனடா போஸ்ட் மற்றும் அதன் முக்கிய தொழிற்சங்கமான கனடிய தபால் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தபால் ஊழியர்களின் மிகைநேர வேலை (overtime) மீதான நாடு தழுவிய தடையால் அஞ்சல் விநியோகத்தில் தாமதங்கள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இரு தரப்பினரும் சந்தித்த பிறகே, இந்த தகவல் வெளிவந்துள்ளது.
கனடா போஸ்ட் தனது சமீபத்திய சலுகைகளை புதன்கிழமை முன்வைத்தது,
இதில் அதிக ஊதியம் மற்றும் பகுதிநேர ஊழியர்களின் படைப்பிரிவை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத் தக்கது.
