Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய பிள்ளைகள் அதிகமாக தொலைப்பேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை

மே 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4 ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்.பாடி சதுரங்கச் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை பிரதேச செயலாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல. அத்தகைய நிறுவனங்களின் தலைமையில் இருப்பவர்கள் புத்தாக்கமாக சிந்தித்து செயற்படவேண்டும்.

அந்த வகையில் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், நான் யாழ். மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் உதவி மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர். அவர் எந்தவொரு விடயத்தையும் விரைவாகச் செய்து முடிக்கக்கூடியவர். உண்மையில் இவ்வாறான சதுரங்கப்போட்டிகளை ஒழுங்குபடுத்திய அவரைப் பாராட்டுகின்றேன்.

அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் விவாதப்போட்டி நடத்த திட்டமிடுகின்றார். அவ்வாறான சிந்தனையுள்ளவர்களே – இவ்வாறான தலைமைத்துவப்பண்புகள் உள்ளவர்களே இன்று எமக்குத் தேவையாகவுள்ளனர்.

இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர். அத்தகைய பிள்ளைகளுக்கு இவ்வாறு சதுரங்கத்தைப் பழக்கி போட்டியில் பங்குபற்றச் செய்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.

சதுரங்கம் விளையாடுவதால் மூளை வளர்ச்சியடைகின்றது. அதை ஊக்குவித்த பெற்றோரை வாழ்த்துகின்றேன் என மேலும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய நாளுக்கான தங்க நிலவரம்…
அடுத்த செய்தி கனேடிய தபால் தொழிற்சங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம் …..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்தவர்கள் கைது!

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

ஆகஸ்ட் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வரக்காபொல பகுதியில் விபத்து – 35 பேர் காயம்

மார்ச் 22, 2025
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பார்வையாளர் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?