Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் வேளாண்மை வெள்ளத்தில் மூழ்கிய முழு பொறுப்பும் அரச நிருவாகமும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் – இரா.துரைரட்ணம்

ஜனவரி 21, 2025
படிக்க 4 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பல கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு மாற்றியுள்ளதுடன் விவசாயிகள் கடனை எவ்வாறு கட்டுவது நஞ்சு குடித்து சாவதா அல்லது தூக்கு போடுவதா என சொல்லான துன்பத்தில் உள்ளனர். எனவே வெள்ளம் தேங்கி நிற்பதற்கான முழு பொறுப்பையும் அரச நிருவாகமும் அரசும் பொறுப்பெடுத்தாக வேண்டும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்

மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (20) இடம்பெற்று ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

மாவட்டத்தை பொறுத்தளவில் இந்தவருடம் தென்னிலங்கையில் கூடுதலாக பெய்த மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள பல குளங்கள் திறக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல குளங்கள் திறக்கப்பட்டு இன்று வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக காலநிலை மாற்றத்தினால் கடந்த 20ம் திகதிக்கு பின்னர் மாவட்டத்திலும் நாடு பூராகவும் கன மழை பெய்யும் என அரசாங்கத்தால் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அரச நிருவாகங்கள் மற்றும் இந்த புதிய அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில வயல் நிலங்களை தடுத்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை எனவே இந்த பாதிக்கப்பட்ட வயல் விடயங்களில் பொறுப்பு கூறவேண்டிய பொறுப்பு அந்தந்த திணைக்களத்தையும் அரசையும் சாரும் எனவே பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு அரச நிருவாகங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அதேவேளை விவசாய அமைப்புக்களில் இருக்கின்ற ஒரு சிலர் முரண்பாடு காரணமாக பல வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறியமுடிகின்றது. கருத்து சொல்வது என்பது வேறு முடிவு எடுப்பது என்பது வேறு அனைவரும் கருத்துக்களை கேட்டு அரசாங்க அதிபர் எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படும் என விடும்பட்சத்தில் அரச திணைக்களம் உடனடியாக விரைந்து விசேட கூட்டங்களை நடாத்தி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அடையாளப்படுத்தி அந்த வேளாண்மை அறவடை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தால் கூடுதலான சேதம் ஏற்பட்டிருக்காது.

அதுமட்டுமல்ல முன்கூட்டியே இந்த விடயம் பலருக்கு தெரிந்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை தண்ணீரில் மிதக்கின்றது. இயற்கையால் மழைபெய்து அழிவுகள் நடக்கும் சில விடயங்களை நிறுத்த முடியாது. ஆனால் சில செயற்பாடுகள் சம்மந்தமாக விவசாய திணைக்களம், அரசாங்க அதிபர், சில விவசாய அமைப்புக்களின் செயற்பாடுகளை நேர்தியாக மேற்கொண்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை பாதிப்பில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும்.

மாவட்டத்தில் எப்போது நெல்அறுவடை செய்கின்றதே அன்றில் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது அதை விடுத்து சிங்கள பகுதிகளில் நெல்லை அறுவடை செய்யும் காலத்தில் நெல்லை கொள்வனவு செய்வது ஏற்புடையதல்ல

கடந்த அரசாங்கத்தால் விவசாயிகள் நெல்லை கொள்வனவு செய்யும் பிரச்சனைக்கு பல தரப்பட்ட முரண்பாட்டிற்கு முகம் கொடுத்தவர்கள் இருந்தபோதும் நல்லாட்சி புரிகின்ற இந்த புதிய அரசு இதுவரை நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை?

எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அரசாங்கம் அவர்களுக்கான நஷ்டஈடு வழங்க ஈடுபடவேண்டும் அதேவேளை அறுவடை செய்யவுள்ள நெல்லை இதுவரைக்கும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் செய்யவில்லை நெல்லை கொள்வனவு செய்யவேண்டும்.

அதேவேளை இந்த புதிய அரசு வந்ததின் பின்னர் 3 தடவைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது வெல்லாவெளியில் இருந்து மண்டூருக்கு இடைப்பட்ட பகுதி வேற்றுச்சேனை மற்றும் சித்தாண்டி வந்தாறுமூலை பகுதி மக்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியாது வெள்ளத்தால் அடிக்கடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எனவே புதிய அரசு அது செய்யப்போறோம் இது செய்யப்போறோம் என மக்களை ஏமாற்ற வேண்டாம் அந்தபகுதியில் வெள்ளம் வராமல் தடுக்கும் செயற்திட்டதை நடைமுறைப்படுத்துங்கள் நிவாரணம் கொடுப்பதை செய்யவும் அப்படி இல்லையா கும்புட்டு கேட்கிறேன் எங்களுக்கு சம்மந்தம் இல்லைனெ தெரிவித்துவிட்டு உங்களுடைய வேலையை பார்க்க வேண்டும்.

சில விவசாய அமைப்புக்கள் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை மட்டக்களப்பில் புதுவிதமான விடயம் தோன்றியுள்ளது. வெள்ளம் இயற்கை அனர்த்தம் வருடாவருடம் வரும் இந்த காலகட்டத்திலே ஒரு சில விவசாய அமைப்புக்குள் சில பிரதிநிதிகள் சில கருத்துக்கள் சொல்வது ஏற்புடையதல்ல இந்த கருத்துக்களை அடக்கி வாசிக்க வேண்டும் இல்லாவிட்டால் அமைப்பில் இருந்து இராஜனாமா செய்ய வேண்டும்.

பிரச்சனை நேரத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் அதனைவிடுத்து அவர் பிழை இவர் பிழை என தெரிவிக்கும் காலகட்டம் இது அல்ல தோளோடு தோள் நின்று விவசாயிகளை காப்பாற்றி அவர்களை மீள புத்துயிர் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த விவசாய அமைப்புக்களுக்கு இருக்கின்றது. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்டுள்ள நிலையில் உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை விட்டுவிட்டு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி பாரவூர்தி விபத்தில் இருவர் காயம்.
அடுத்த செய்தி யாழில். தோட்ட கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு..

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சம்பவம் – இதுவரை 7 பேர் கைது!

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?