டொராண்டோ நகரில் ஒட்டுமொத்தக் குற்றச்செயல்கள் குறைந்திருந்தாலும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான பாதையில்சென்று கொண்டிருப்பதாக டொராண்டோ காவல்துறை அதிபர் மைரன் டெம்கிவ் (Myron Demkiw) எச்சரித்துள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில், அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். டொராண்டோ மாநகரில் இந்த ஆண்டு பொதுவான பாதுகாப்பு நிலை மேம்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஈடுபடும் கார் கடத்தல், வழிப்பறி மற்றும் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் இத்தகைய குற்றங்களுக்குள் தள்ளப்படுவதற்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணியாக இருப்பதாக காவல்துறை கருதுகிறது.
பெரிய குற்றக் கும்பல்கள் சிறுவர்களைத் தங்கள் வலையில் வீழ்த்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றன.
கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (YCJA) கீழ் சிறுவர்களுக்குக் குறைவான தண்டனைகளே வழங்கப்படுவதால்,
அவர்களைப் பயன்படுத்தி பெரிய குற்றங்களைச் செய்ய கும்பல்கள் திட்டமிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
