டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து இலங்கை மக்கள் மீண்டு வர கனடா துணை நிற்கிறது என நாடாளுமன்ற செயலாளரும் சர்வதேச மேம்பாட்டுக்கான வெளியுறவுத்துறை செயலாளருமான ரந்தீப் சராய் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று, உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற உயிர்காக்கும் உதவிகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக @redcross canada மற்றும் @Humanitarian Coalition மூலம் 1 மில்லியன் டாலர் உதவியை இலங்கைக்கு வழங்குவதாக ரந்தீப் சராய் தெரிவித்துள்ளார்.


