கனடிய இராணுவம் (Canadian Army) தனது தரைப் படைகளை
நவீனமயமாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
நீண்டகாலமாகப் பயன்பாட்டில் உள்ள தாக்குதல் துப்பாக்கிகளின்
தொகுதியை, கனடிய இராணுவம் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக
மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கனடியன் மாடுலர் தாக்குதல் துப்பாக்கி திட்டத்தின் கீழ், புதிய ஒப்பந்தம் விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஆயுதங்கள், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர்
ஆப்கானிஸ்தான் போரின் போது பயன்படுத்தப்பட்ட C7 மற்றும் C8 ரகப் பழைய துப்பாக்கிகளுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சிறிய ஆயுதங்களின் இருப்பை மாற்றுவதற்கான முழுத் திட்டத்திற்கு 500 மில்லியன் முதல் 1 பில்லியன் டொலர் வரை, கனடிய இராணுவத்துக்குச் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
