நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணாமாக பல்வேறு அனர்த்தங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
