Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்ப்பு

டிசம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இருதினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார்.

பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காலணாளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை
அடுத்த செய்தி 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த பயணிகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு…

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் இளைஞன் சித்திரவதை சம்பவம்- சந்தேக நபர் கைது!

நவம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?