மத்திய அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எந்தெந்த விதங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், புதிய பொது AI பதிவேடு (Public AI Register) ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை நாட்டின் மத்திய கருவூல வாரியத்தின் தலைவர் (Treasury Board President) ஷஃப்காட் அலி அறிவித்தார்.
பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) அரச சேவையை மேலும் திறமையானதாக மாற்றும் இலக்கின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.
ஆரம்பகட்டமாக, 43 அரசாங்க நிறுவனங்கள் குறித்த தகவல்களுடன், 400க்கும் அதிகமான AI அமைப்புகள் குறித்த விவரங்கள் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் அரசின் AI பயன்பாட்டை நேரடியாகக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
