மொன்றியல் நகரத்தில் உள்ள பவுல்வர்டு செயின்ட்-லாரன்ட் வீதியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சினிமா எக்ஸ்சென்ட்ரிஸ்’ (Cinéma Excentris) திரையரங்கக் கட்டிடம் விரைவில் இடித்துத் அழிக்கப்படவுள்ளது.
கலைப் படங்களைத் திரையிடுவதில் மையமாக விளங்கிய இந்தக் கலாச்சாரக் கூடம், தற்போது குடியிருப்புகளாக மாற்றப்பட உள்ளது.
புதிய உரிமையாளரான கோஜீர் இமோபிலியர் (Cogir Immobilier) என்ற கட்டுமான நிறுவனம், இந்தப் பகுதியில் எட்டு மாடிகள் கொண்ட புதிய குடியிருப்பு வளாகத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.
மொன்றியலில் நிலவி வரும் வீடுகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, புதிய குடியிருப்புகளில் 30 சதவிகித வீடுகளை குறைந்த விலையிலான வீடுகளாக ஒதுக்கீடு செய்வதற்கு கட்டுமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இவ்வளவு பெரிய அளவில் குறைந்த விலையிலான வீடுகளை ஒதுக்குவது, மொன்றியல் நகரத்தின் வீட்டுப் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
