Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடிக்க உதவிய தொலைபேசி இருப்பிடத் தரவுகள்

ஜூலை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலைச் சேர்ந்த சிறுமியான மகளைக் கொலை செய்த தந்தையின் தொலைபேசி இருப்பிடத் தரவுகளே,  சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடிக்க பொலிஸாருக்குத் துணை செய்துள்ளதாக, நியூயோர்க் – எலிசபெத்தவுன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் நகரைச் சேர்ந்த லூசியானோ பிராட்டோலின்  என்பவர் மீது, அவரது மகள் மெலினா பிராட்டோலினைக் கொலை செய்தமை மற்றும் சடலத்தை மறைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் கீழ், நியூயோர்க் மாநிலத்தின் எலிசபெத்தவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இவர் மீதான வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்களின் ஆரம்பகட்ட வாதங்கள் ஆரம்பித்துள்ளன.

2025 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில் பிராட்டோலின், அவசர உதவி எண்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி, வெள்ளை நிற வேனில் வந்த சிலர் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் நியூயோர்க் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

எனினும், பிராட்டோலினின் சம்மதத்துடன் அவரது தொலைபேசியைப் பரிசோதித்த பொலிஸார், அவர் கூறிய தகவல்களுக்கும் தொலைபேசியின் ஜி.பி.எஸ் (GPS) இருப்பிடத் தரவுகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இருப்பதை அவதானித்தனர்.

நெடுஞ்சாலையில் பயணம் செய்ததாகக் கூறியவர், அதற்கு முந்தைய நாள் டைக்காண்டரோகா (Ticonderoga) என்ற கிராமப்புறப் பகுதியில் நீண்ட நேரம் தங்கியிருந்ததை தொலைபேசித் தரவுகள் காட்டின.

தொலைபேசியின் இருப்பிடத் தரவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தேடுதலில், ஜூலை 20 ஆம் திகதி டைக்காண்டரோகா காட்டுப்பகுதியில் உள்ள ஒரு சிறிய குளத்தின் சேற்று நிலப்பகுதியில் இருந்து சிறுமி மெலினாவின் சடலம் மீட்கப்பட்டது.

அத்துடன், பிராட்டோலின் அன்றைய தினம் மாற்றிய ஆடைகள் மற்றும் காலணிகள் அடங்கிய பையும் சடலத்திற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளை பிராட்டோலின் நிராகரித்துள்ளதுடன், தாம் குற்றமற்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.

12 பேர்களைக் கொண்ட ஜூரி சபை முன்னிலையில் நடைபெறும் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், சிறுமியின்  தாயாரும் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் கார்னி
அடுத்த செய்தி சென் லோரன்ஸ் நதியில் தவறி விழுந்த பெபிட்டோ ஜூனியரை தேடும் பணிகள் நிறுத்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

சிறுவர்களை வன்முறைக்கு இழுத்த 764 குழு – கியூபெக் இளைஞர் கைது!

ஏப்ரல் 23, 2026
கியூபெக்

மொன்ட்ரியல் நகரில் நேற்று பிரம்மாண்டப் போராட்டம்

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?