இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த 15 பலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவால் நிர்வகிக்கப்பட்டு வரும் சுகாதாரத்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை 330 பலஸ்தீனியர்களின் உடல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 95 உடல்கள் மட்டுமே முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மரபணு பரிசோதனைக்கான கருவிகள் இல்லாததால், இஸ்ரேல் ஒப்படைத்த உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
