இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் கிளாடியா புயலால் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 80 மி.மீ வரை மழை பெய்யும் என்றும், வேல்ஸில் உயரமான பகுதிகளில் 100-150 மி.மீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை அலுவலகம் கணித்துள்ளது.
கடுமையான வானிலை பரவலான இடையூறுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மின்சாரத் தடைகள், பயண தாமதங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.


