Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட தாக்கத்தின் உச்சத்தில் தாயார் மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட தாக்கத்தின் உச்சத்தில் தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக்கொன்ற வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு 14 வயது.

குறித்த சிறுவன் பப்ஜி விளையாட்டில் அடிமையாகயிருந்ததாகவும், இதனை தாய் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பப்ஜியில் தனக்கான இலக்குகளை அடையமுடியாத சந்தர்ப்பங்களில் சிறுவன் ஆக்ரோஷமடைவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

கொலை நடந்த அன்று, பல மணித்தியாலங்களாக பப்ஜி விளையாடிய சிறுவன், ஒரு இலக்கை தவறவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.

அதேநேரம் சிறுவன் அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக அவனது தாய் கண்டிக்கவே சிறுவனுக்கு மேலும் எரிச்சல் அதிகரித்தது.

இதனால் சிறுவனின் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர், இரண்டு சகோதரிகள், மஹ்னூர் மற்றும் ஜன்னத் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றுள்ளான்.

விளையாட்டின் தீவிர தாக்கத்தால் இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இவ் வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று இத் தீர்ப்பை வழங்கியது.

குறித்த சிறுவனின் வயதை அடிப்படையாகக் கொண்டு, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை அதாவது, ஒரு கொலைக்கு 25 வருடங்கள் என மொத்தம் 100 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பிலிப்பைன்ஸை தாக்கும் சூறாவளி
அடுத்த செய்தி ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஹங்கேரியில் வினோதமான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு.

செப்டம்பர் 21, 2024
உலகம்

வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்!

ஜூலை 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் சிகரெட் விற்பனை வரலாறுகாணாத வீழ்ச்சி..!!

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?