உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரஷ்யா இடைவிடாமல் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அத்தோடு இத்தாக்குதலில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உட்கட்டமைப்புகள் தாக்குலுக்கு ஆளானதால் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
