அரசாங்கம் தற்காலிக விசாக்களை மொத்தமாக ரத்து செய்யும் புதிய அதிகாரத்தைப் பெறத் தீவிரமாக முயன்று வருகிறது.
அதன் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து நடக்கும் விசா மோசடிகளைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கம் எனத் தெரியவருகின்றது.
பில் C-12 என்று அழைக்கப்படும் புதிய எல்லைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அதிகாரம், பரந்த “பொது நலன்” பிரிவின் கீழ், தற்காலிக வதிவிட விசாக்கள் (TRVs) மற்றும் அனுமதிகளை ரத்து செய்ய அரசுக்கு வழிவகுக்கும்.
அமைச்சரின் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு விளக்கத்தில், பெருமளவு விசா ரத்து அதிகாரத்தைக் கோருவதற்கான உந்துதலாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவை “நாட்டு வாரியான சவால்கள்” என்று தனிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன.
கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை (IRCC), கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA), மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்கப் பங்காளிகள் ஆகியோர் மோசடியான வருகையாளர் விசா விண்ணப்பங்களைக் கண்டறிந்து ரத்து செய்வதற்காக ஒரு பணிக் குழுவை அமைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
