கியூபெக் மாகாணத்தில் உள்ள செயின்ட்-சிமோன்-டி-ரிமௌஸ்கி பகுதியில் உள்ள 132 நெடுஞ்சாலையில், கார் ஒன்று கியூப் லொறி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றது.
உயிரிழந்த கார் ஓட்டுநர் 60 வயது மதிக்கத்தக்கவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட முதற்கட்ட அறிக்கையின்படி, கார் ஓட்டுநர் தனது பாதையிலிருந்து விலகிச் சென்று, எதிர்த் திசையில் வந்த கியூப் லொறி மீது மோதியுள்ளார்.
லொறியில் பயணித்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்துக்கான சரியான காரணங்களை, தடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ந்து கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
