Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

அக்டோபர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.

நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி அணிந்தபடி, அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுமார் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதையும் சிசிடிவி காட்சிகள் தெரிய வந்துள்ளது

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டின் விளைவாக பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி லசந்த விக்ரமசேகர ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஐஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி 100 கோடி வசூலித்த டியூட் திரைப்படம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற நெல்லின அறுவடை விழா

மார்ச் 24, 2026
இலங்கை

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில் 27ஆம் திகதி போராட்டம்.

பிப்ரவரி 21, 2025
இலங்கை

மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான வழிமுறைகளை இலங்கை நிராகரிக்கிறது-விஜித ஹேரத்!

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் செம்மணி அகழ்வில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது(video)

ஜூலை 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?