அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதன் போது, ட்ரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் விருதான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த விருது வரும் மாதங்களில் வழங்கப்படும்.
அவருக்கு விருது அறிவிப்பு செய்யப்பட்ட பிறகு, ட்ரம்ப் பணயக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, காஸா அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள ட்ரம்ப் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் பகுதிக்குச் செல்ல உள்ளார்.
