Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய பெரிய மீன்கள்!

ஜூன் 17, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மீன் பிடி தடைகாலம் முடிந்ததும் தமிழக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90க்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.

மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு இன்று காலை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

இவ்வாறு மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகன்னிபாறை, கட்டா, சூவாறை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சிறிய வகை சீலா 400 ரூபாய்க்கும், பெரிய அளவு சீலா 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் நகரை, பாறை மீன் உள்ளிட்டவைகளுக்கும் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் மீனவர்கள் தீவிரம் காட்டினர்.

மீன் பிடி தடையால் கடந்த 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுக கடற்கரை இன்று மீனவர்கள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது.

முந்தைய செய்தி நடுக்கடலில் படகு உடைந்து மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு.
அடுத்த செய்தி நியூசிலாந்தோடு மோதும் பப்புவா நியூகினியா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்உலகம்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – ரஷ்ய ஜனாதிபதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா ?

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா பேராறு வான் கதவுகள் திறப்பு.

ஜனவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் கடந்த ஆண்டை விட பலமடங்காக அதிகரிக்கும் டெங்கு

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?