டி 20 சர்வதேச உலக கிண்ண போட்டியானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் 39 வது லீக் தொடரானது இன்று இடம்பெறுகின்றது. இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த இரு அணிகளும் தொடரிலிருந்து முன்னதாகவே வெளியேறியிருந்த நிலையில் இப்போட்டி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த சர்வதேச போட்டியே தான் விளையாடும் இறுதி போட்டி என நட்சத்திர வேகபந்து வீச்சாளரான டிரென்ட் பவுல்ட் அறிவித்திருந்தார். ஆதலால் நியூசிலாந்து அணி டிரென்ட் பவுல்ட்டை வெற்றியோடு வழியனுப்பும் முகமாக விளையாட்டில் தீவிரம் காட்டி வருகின்றது.