இவ்வாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாதியை “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக” மோகிருக்கு வழங்கவும், மற்ற பாதியை “படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக” அகியோன் மற்றும் ஹோவிட்டிற்கு கூட்டாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.
