நவம்பர் 1ம் திகதி முதல் 19ம் திகதிவரை ஏர் இந்தியா (AirIndia )விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
குறிப்பிட்ட நாட்களில் ஏர் இந்தியா விமானம் ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என குர்பத்வந்த் சிங் பன்னுன் உறுதியாகக் கூறியிருப்பதாவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன் இதே காலகட்டத்தில்தான் சீக்கிய இனப் படுகொலை நிகழ்ந்தது. ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (SFJ ) அமைப்பின் நிறுவனரான பன்னுன், இந்தியாவில் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கவர்.
#Airindia #India #Flight