நடிகை ப்ரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். அண்மையில் ப்ரியங்கா மோகனும், பவன் கல்யாணும் நடித்திருந்த ஓஜி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ரா. கார்த்திக்கினுடைய இயக்கத்தில் “மாட்(D) இன் கொரியா” என்ற படத்தில் ப்ரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரியாவில் எடுக்கப்பட்டதுடன் படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர். “மாட்(D) இன் கொரியா” திரைப்படம் விரைவில் ஓடிடியிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
