ரா. கார்த்திக்கின் இயக்கத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் நடிக்கும் திரைப்படம் தான் “மேட் இன் கொரியா” இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்த படம் கொரியாவில் படமாக்கப்பட்டுள்ளதுடன், படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் “மேட் இன் கொரியா” திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
