இவ்வாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. இதன்படி இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாஸ்லோ 1954ல் ஹங்கேரியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது முதல் நாவல்(Satantango, 2012) 1985ல் வெளியானது.
இவர் தீவிரவாதத்துக்கு மத்தியில் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் வகையில் எழுத்தாளரின் கவர்ச்சியான தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்க்கு எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’(Herscht 07769) என்ற நாவல், சமூக அமைதியின்மையை வெளிப்படுத்துவதால் இது ஒரு சிறந்த சமகால நாவலாக உள்ளது.
மேலும் லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய் ஐரோப்பாவின் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று நோபல் பரிசுக் குழு பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
